மசூத் அசார் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டதால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

1)அசாருக்கு சம்பந்தமான அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள உலக நாடுகள் அனைவரும் உடனடியாக முடக்க வேண்டும்.

2) இனி மசூத் அசார் தங்களது நாட்டிற்குள் நுழைய அசாருக்கு தடை விதிக்க வேண்டும். மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தங்கள் நாட்டு எல்லை அசார் பயன்படுத்துவதையும் ஐநாவின் அனைத்து உறுப்பு நாடுகளும் தடை செய்ய வேண்டும்.

3) தங்கள் நாடுகளில் இருந்து நேரடியாகவோ, மறைமுகவோ மசூத் அசாருக்கு இயக்கத்திற்கு விற்கப்படுவதையோ அல்லது தங்கள் நாட்டின் எல்லை வழியாக செல்வதையோ தடுக்க வேண்டும்

4) மசூத் அசார் மீதான தடை எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்பதை இதற்காக நியமிக்கப்பட்ட குழு ஆண்டு தோறும் ஐநா பாதுகாப்பு சபைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும்

5) மசூத் அசாருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை அடுத்து அசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. அசார் தொடர்பான தீவிரவாத இயக்கம், அமைப்பு அனைத்தையும் உடனடியாக மூட வேண்டும்..

தாக்குதல் சம்பவங்கள்:

2001ல் நடைபெற்ற பாராளுமன்ற தாக்குதல், 2008ல் மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல், உரி ராணுவ முகாம் மீதான தாக்குதல், 2016ல் பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் போன்ற தாக்குதல்களை ஜெய்ஷ்-இ-முஹம்மது இயக்கம் நடத்தியது குறிப்பிடத்தக்கது

Sharing is caring!

shares