மலைக்கோயில் மாயன்(மாஆயன்) திருவிழா

ஆயர்கள் அவர்களது இறைவன் மாஆயன்(மாயன்) சம்பந்தப்பட்ட விழாவாக விளங்குகிறது சித்ராபௌர்ணமி துர்வாசரால் சபிக்கபட்ட மண்டூகமகரிஷிக்கு சாபவிமோசனம் அளிக்கவும், இடைச்சிஆண்டாள் நாச்சியார் சூடிகொடுத்த மாலையை ஏற்று கொள்ளவும் வைகை எழுந்தருள்கிறார் ஶ்ரீ அழகுமலையான்

ஶ்ரீ அழகுமலையான் வைகை ஆற்றில் இறங்கும் பொழுது இடைச்சியான ஆண்டாள்நாச்சியார் சூடி கொடுத்த மாலையை அணிந்தே இறங்குகிறார்.ஆண்டாள் நாச்சியார் அழகரை சுந்தரதோளுடையான் என்று பாடுகிறார்

இந்த மாலையை ஏழுமலையானும்,அழகுமலையானையும் தவிர எந்த பெருமாளும் அணிவதில்லை.ஏனென்றால் ஏழுமலையானும்,அழகுமலையானும் ஆண்டாள்தாயார் காதலித்த இடையனான கண்ணனாகவே பார்க்கப்படுகிறார்கள்
வடமதுராவில் கண்ணனை கொண்டாடுவதை போல தென்மதுராவில் அழகரை ஆயர்கள் கொண்டாடுகிறார்கள்

தமிழ்நாட்டில் அதிக அளவில் மக்கள் கூடும் பிரசித்தி பெற்ற கண்ணன் கோயில் அழகர்கோயில் தான் கோனார்களின் தலைவனாக மாயனான ஶ்ரீ அழகுமலையான் விளங்குகிறார்.
இங்குள்ள கோனார்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு முதல்மொட்டை அழகருக்கு போட்டுவிட்டு பிறகு தான் குலதெய்வத்திற்கு மொட்டை போடுவார்கள்.

கோனார்களின் முக்கியதொழிலாக ஆடு,மாடு வளர்ப்பு உள்ளது. கோனார்கள் ஶ்ரீ அழகுமலையானுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து,திரியெடுத்து,தோப்பை எனப்படும் ஆட்டுத்தோலினால் செய்யப்பட்ட பையில் மஞ்சள்,சந்தனம் கலந்த நீரை நிரப்பி அதை தங்கள் தலைவன் ஶ்ரீமாயன் மீது பீச்சி அடித்து மகிழ்வர்

மதுரை மட்டுமல்லாமல் சித்ராபௌர்ணமியன்று தென்தமிழ்நாட்டில் வைகைகரையோரம் அமைந்திருக்கும் அனைத்து பெருமாள் கோயிலில் உள்ள உற்சவர் அழகராக வெள்ளி குதிரைஏறி யாதவர்கள் தலைமையில் வைகை ஆற்றில் எழுந்தருள்வார்

ஏறுதழுவுதல்,மகரத்திருநாள்,கபாடி போன்ற பல பண்பாட்டையும்,கலாச்சாரங்களையும்,திருவிழாக்களையும் தமிழுக்கு தந்த ஆயர்களான கோனார்களுக்கு இத்திருநாளில் நன்றி செலுத்துவோம்…

-மதுரை கா.ராஜேஷ்கண்ணா

Sharing is caring!

shares