துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு

காட்பாடியில் திமுகவிடம் பணம் பறிமுதல் செய்த வழக்கில் F.I.R பதிவு செய்யப்பட்டுள்ளது – தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
வேலூர் பாராளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக காட்பாடியை சேர்ந்த கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்) போட்டியிடுகின்றார்.
இவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக துரைமுருகனின் உதவியாளர் அஸ்ரப் அலி, திமுகவை சேர்ந்த பூஞ்சோலை சீனிவாசன், மற்றும் விஜயா வீட்டிலிருந்து ரூ.50 கோடிக்கு மேற்பட்ட பணத்தை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

காந்தி நகரில் ரூ 19லட்சத்தையும் கைப்பற்றினர். இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரகாஷ் சாஹூ தெரிவித்து உள்ளார்.

Sharing is caring!

shares