ரிபப்ளிக் டிவியின் கருத்து கணிப்பு பாஜக கூட்டணி 304-316 இடங்களை பெறும் மீண்டும் மோடியே பிரதமர்.

சென்னை: லோக்சபா தேர்தல் தொடர்பாக ஜன்கிபாத் என்ற பெயரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகளில் சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரீபப்ளிக் பாரத் செய்தி தொலைக்காட்சியில், ஜன்கிபாத் என்ற பெயரில் இந்த கருத்துக் கணிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தின் கள நிலவரமும் ஆராயப்பட்டுள்ளது.

தேசிய அளவில் எந்த கட்சிகள் எவ்வளவு தொகுதிகளை பிடிக்கும் என்பது பற்றியும், இந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பு குறித்த சுவாரசிய முடிவுகளை பாருங்கள்: தமிழகத்தில் மொத்தம், 20,000 பேரிடம், இந்த கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்குமே தமிழகத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதாகவும், ஆனால் இரு தரப்பிலும், கூட்டணி கட்சிகளால்தான் பல தொகுதிகள் இழக்கப்பட வாய்ப்புள்ளதாக அக்கணிப்பு கூறுகிறது.

அதிமுக கூட்டணிக்கு வாய்ப்பு

சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்துக்கு மாற்றாக, இந்த கருத்துக் கணிப்பில் ஆச்சரியப்படத்தக்க ஒரு அம்சம் இடம் பெற்றுள்ளது. அது என்னவென்றால், அதிமுக கூட்டணி 20 முதல் 21 லோக்சபா தொகுதிகளை வெல்ல வாய்ப்பு உள்ளது என்பதுதான். அதேநேரம், திமுக கூட்டணி 18-19 தொகுதிகளை மட்டுமே வெல்லக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பாஜக கூட்டணி

தேசிய அளவில் எடுத்துக் கொண்டால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 304 முதல் 316 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 126 தொகுதிகள் முதல் 117 தொகுதிகள் வரை வெல்லக் கூடும் எனவும்தெரிவித்துள்ளது, மீண்டும் மோடியை மக்கள் பிரதமராக எதிர்பார்க்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளது, பாஜக தனித்து 248 முதல் 260 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளது. காங்கிரஸ் மட்டுமே தனித்து 73 முதல் 80 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் வெளியுடப்பட்டுள்ளது..!

Sharing is caring!

shares