உங்கள் அனுமதி இல்லாமல் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க முடியாது?

வாட்ஸ் ஆப்களில் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் குரூப்களில் இணைக்கலாம். நீங்கள் நினைத்தால் உங்களிடம் ஒருவரின் போன் நம்பர் இருந்தால் அவர் உங்களை எந்த குரூப்பிலும் இணைக்கலாம். நீங்கள் விருப்பம் இல்லை என்றால் அதிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்பதே வழக்கமாக இருந்தது.

தற்போது எப்படி?
இந்த நிலையில் இப்போது புதிதாக இதில் கட்டுப்பாடு கொண்டு வரும் வகையில் அப்டேட் இறக்கப்பட்டு உள்ளது. அதன்படி உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் இனி வாட்ஸ் ஆப்பில் சேர்க்க முடியாது. உங்களை ஒரு குழுவில் சேர்க்க வேண்டும் என்றால் உங்கள் முழு அனுமதி இனி தேவைப்படும். இதை நீங்கள் ஆப் செய்தும் வைத்துக் கொள்ள முடியும்.

குரூப் விதிமுறை?
புதிய முறைப்படி உங்கள் வாட்ஸ் ஆப்பில் உள்ள ”settings” க்கு சென்று ”group” என்ற பகுதியில் “nobody,” “my contacts,” “everyone” இந்த மூன்றில் எதையாவது ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, “nobody,”யை தேர்வு செய்தால் உங்களை யார் குழுவில் இணைக்க நினைத்தாலும் உங்களிடம் மெசேஜ் மூலம் லிங்க் அனுப்பி அனுமதி பெற வேண்டும். இதற்கு அவர் தனியாக உங்களிடம் மெசேஜ் அனுப்ப வேண்டும். “my contacts,” – இதை தேர்வு செய்தால், உங்கள் நண்பர்கள் மட்டும் உங்களை குழுக்களில் இணைக்க முடியும். இதற்கு அந்த நண்பரின் போன் எண்ணை நீங்கள் சேவ் செய்திருக்க வேண்டும். “everyone.” – இதை தேர்வு செய்தால் யார் வேண்டுமானாலும் எப்போதும் போல உங்களை குழுக்களில் இணைக்கலாம்.

இது மட்டுமில்லாமல் இந்த அப்டேட்டிலும் பார்வேர்ட் மெசேஜ்களுக்கான கட்டுப்பாடு 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதை மீறி பார்வேர்ட் செய்ய நினைப்பவர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்பை கருதி இந்த அப்டேட் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

Sharing is caring!

shares