தம்பிதுரை வேட்புமனு தாக்கல்

கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகிய அதிமுக வேட்பாளர்கள் தம்பிதுரை கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி அன்பழகன் முன்னணியில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

முன்னதாக கரூர் வெங்கமேடு கரூர் பேருந்து நிலையம் , சுங்க,கேட் தாந்தோன்றிமலை பகுதி வழியாக வாக்கு சேகரித்து கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்துக்கு ஆகிய அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வருகை புரிந்தார் .பின்னர் சுமார் ஒரு மணி அளவில் கரூர் மாவட்ட ஆட்சியரும் கரூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி சட்டப்படி நேர்மையான தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பேன் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அதில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவோடு சுமார் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என சூளுரைத்தார்

Sharing is caring!

shares