‘ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம்’ – தமிழிசை சவுந்தரராஜன்

வியாபாரிகள், நெசவாளர்கள் மகிழ்ச்சியாக இல்லை, பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்று பல பொய்களை வைகோ கூறியுள்ளார். பயிர் காப்பீடு திட்டத்தில் அதிகம் பலன் அடைந்த மாவட்டம் தூத்துக்குடி. சிறுவணிகத்தில் அன்னிய முதலீட்டை தடுத்த கட்சி பா.ஜனதா. முத்ரா கடன் திட்டத்தில் 1 கோடியே 90 லட்சம் பேருக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தி.மு.க.வினர் பொய் பிரசாரம் செய்கின்றனர். அங்கு பல பிரச்சினைகளுக்கு காரணம் தி.மு.க. கொடுத்த அனுமதி தான். ஸ்டெர்லைட்டை பொறுத்தவரை தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது என்று குற்றஞ்சாட்டினார் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்.

Sharing is caring!

shares