வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?

வேளாங்கண்ணி: உண்மையான வரலாறு என்ன?
விடை இல்லாத சில கேள்விகள் ….?

வேளாங்கண்ணி முதலிலிருந்தே ஒரு கிறித்தவத் தலம் என்றே
நம்மில் பெரும்பாலானோர் நம்பவைக்கப்பட்டுள்ளனர்.
நாம் நினைப்பதுபோல் இது கிறித்தவத் தலமன்று, சைவத் திருத்தலம்.

வேளாங்கண்ணியின் உண்மையான, பழைய பெயர் “வேலன_கண்ணி”, அம்பிகைக்குத் தேவாரம் சூட்டிய திருநாமம் இது.

தமிழ்ச்சைவ வரலாற்றில் நாம் கருத்திற்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. சமய குரவர் காலத்திலும்,காலத்திற்குப்பின் எழுந்த சிவாலயங்களிலும்
இறைவர் – இறைவியர்க்கு அருந்தமிழ்ப் பெயர்களே வழங்கின என்பதே அது. தேவாரப் பாக்களை ஊன்றிப் படிக்கும்போது அம்பிகையின் இத்தகைய பெயர்கள் பல தெரியவருகின்றன.

”மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
‘வேலனகண்ணி’யொடும் விரும்பும்மிடம்………” (திருஞானசம்பந்தர்)

சேல் [மீன்] போன்ற கண் அமைவதால் “சேலன கண்ணி”,
வேல் போன்ற விழி இருப்பதால் “வேலன கண்ணி”.
பிற்காலத்தில் வேளாங்கண்ணி எனத் திரிந்தது.
வேலன கண்ணி, சேலன கண்ணி என்பன உவமையால் அமையும்
பெண்பாற் பெயர்கள்.

”கருந்தடங் கண்ணி” என்னும் பெயரும் அம்மைக்கு உண்டு.
”வேலினேர்தரு கண்ணி” எனவும் தேவாரம் அம்மையைப் போற்றுகிறது. ”இருமலர்க் கண்ணி” இமவான் திருமகளாரின் மற்றோர் அழகிய பெயர்.

மதுரையம்பதியின் மங்காப்புகழுக்குக் காரணம்
மலயத்துவசன் மகளார் அங்கயற்கண்ணியின் ஆளுமை.

திருக்கற்குடி எனும் தலத்தில் அம்மையின் பெயர் “மையார் கண்ணி” , கோடியக்கரை – குழகர் ஆலயத்தில் அம்மையின் நாமம் ’மையார் தடங்கண்ணி’.
இதே ரீதியில் காவியங்கண்ணி, நீள் நெடுங்கண்ணி, வேல்நெடுங்கண்ணி,
வரி நெடுங்கண்ணி, வாளார் கண்ணி என்று இன்னும் சில பெயர்களும் உண்டு.

இவ்வாறு, அழகியலில் தோய்ந்த அடியார்கள் இது போல அம்மையின் கண்ணழகையும், கண்களின் கருணையையும் வைத்தே
பல இனிய நாமங்களைச் சூட்டி மகிழ்ந்துள்ளனர்.

இதெல்லாம் தேவாரப் பாதிப்பன்றி வேறில்லை என உறுதிபடச் சொல்ல முடியும். சிவாலயங்கள் தோறும் ஓரிரு பதிகங்களையாவது பளிங்குப் பலகைகளில் பொறித்து வைப்பது அரசின், அறநிலைய துறையின் கடமை.
அப்போது தான் தேவாரப் பதிகங்களுக்கும் ஊர்களுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவு மக்களுக்குத் தெரிய வரும்.

விடை இல்லாத சில கேள்விகள் <<

வேளாங்கண்ணி இப்போது மிகப் பிரபலமான கிறித்தவப் புனிதத் தலம் என்றே நிலைநிறுத்தப் பட்டுவிட்டது. ஆனால், இது எப்படி கிறித்தவத் தலமாகிறது என்பதற்கான அடிப்படையான சில கேள்விகள் அப்படியே தான் உள்ளன.

’வேளாங்கண்ணி’ கிறித்தவப் பெயரா ?
விவிலிய ஆதாரம் உள்ளதா ?
இல்லையெனில், வேளாங்கண்ணி என்ற பெயரை சூட்டியது யார்?
போர்த்துகீசிய மாலுமிகளா..?வாத்திகனில் உள்ள போப்பரசரா …?
அல்லது பின்னால் வந்த மிஷநரிகளா?
ஐரோப்பிய மிஷநரிகள் இதே போன்று வேறு தூய தமிழ்ப் பெயர்
எதையாவது சூட்டியுள்ளார்களா?

திரித்துவத்துக்குப் [Trinity] புறம்பாக மேரியைத் தனியாக பெண் தெய்வமாக வழிபடுவது விவிலியத்திற்கும் கிறித்தவ இறையியலுக்கும் ஏற்புடையதா?

இது ஒரு பொதுவான கிறித்தவ வழிபாட்டுத் தலம் என்றால், கிறித்தவரில்
எல்லாப் பிரிவினரும் ஏன் வேளாங்கண்ணிக்கு வந்து வழிபடுவதில்லை ?

ஆரோக்கியத்துக்கும் வேளாங்கண்ணி எனும் பெயருக்கும் என்ன தொடர்பு ?

வேளாங்கண்ணிக்கும் கிழக்குத் தேசத்து லூர்து (Lourdes of the East) என்ற கருத்தாக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா?

லூர்து மேரி (Lourdes) தலத்தில் கொடியேற்றமும், தேர் பவனியும் உண்டா ? ஐரோப்பியர் மொட்டையடித்துக் கொள்வார்களா ?

வேளாங்கண்ணியில் உள்ள மேரி மாதாவின் திருத்தோற்றங்களுக்கு (apparitions) எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்பது கிறித்தவர்களாலேயே ஒப்புக் கொள்ளப் படுகிறது.
இவ்வாறிருக்க, இந்த சர்ச் ‘கிழக்கின் லூர்து’ ஆனது எப்படி ?

லூர்து மேரியை ஆரோக்கிய மாதாவாக ஏன் வழிபடுவதில்லை ?

பல அற்புதங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் இவ்வழிபாட்டுத்தலத்துக்கு
1962 வரை பஸிலிகா என்ற அந்தஸ்து வழங்கப்படாததன் காரணம் என்ன ?

அற்புதங்கள் முன்பே நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆயினும்,
ஆங்கிலேயர் ஆண்ட காலத்தில் ஏன் பஸிலிகா அந்தஸ்துக் கிடக்கவில்லை ?

இது தொடக்கத்திலிருந்தே மகிமை கொண்ட திருத்தலமாக நம்பப்பட்டது என்கிறார்கள். ஆனால்,
வாரன் ஹேஸ்டிங்க்ஸ் முதல் மவுண்ட்பேட்டன் வரையில்
இந்தியாவை ஆண்ட நாற்பதுக்கும் மேற்பட்ட ஆங்கிலேய கவர்னர்களில்
ஒருவர் கூட ஆரோக்கிய மாதாவை வந்து வழிபட்டதாகக் குறிப்பு இல்லை.
இந்த முரணுக்கு என்ன காரணம்?

மிகச் சமீபகாலத்தில் வாழ்ந்த
கிருஷ்ண பிள்ளை (இரட்சணிய யாத்திரிகம் எழுதியவர்),
மாயூரம் வேதநாயகம் பிள்ளை போன்ற தொடக்க காலக்
கிறித்தவத் தமிழ் அறிஞர்கள் கூட…..
வேளாங்கண்ணி திருத்தோற்றம் குறித்து எழுதியுள்ளதாகவோ வேளாங்கண்ணியில் மொட்டைபோட்டு வழிபட்டதாகவோ குறிப்புகள் இல்லை. 1981ல் மறைந்த தேவநேயப்பாவாணர் கூட‘கிறித்தவக் கீர்த்தனைகள்’ நூலில் ஆரோக்கிய மாதாவைக் குறித்துப் பாடல்கள் இல்லை.
இதைக் குறித்து என்ன சொல்கிறீர்கள்?

ஏராளமான கிறிஸ்தவர்கள் குழுமிக் கும்பிடும் வேளாங்கண்ணி சர்ச்சில்
இதுவரை எந்தப் போப்பும் ஆரோக்கிய மாதாவை மண்டியிட்டு வணங்கியுள்ளதாகத் தெரியவில்லை. இதற்கு என்ன காரணம்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம்
ஆதாரபூர்வமாக விடைகாண முற்பட்டால்……..!
வேளாங்கண்ணியின் உண்மையான சரித்திரம் தெரியவரக்கூடும்.

Sharing is caring!

shares