பொள்ளாச்சி பாலியல் வழக்கு, ஸ்டாலின் மருமகன் மீது வழக்கு பதிந்தபின் மெளனம் ஆனது ஏன்?

பொள்ளாச்சியில் பல பெண்களையும், கல்லூரி மாணவிகளையும் 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் கொடுமை செய்து வீடியாே எடுத்து மிரட்டி பணம்பறித்தது தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுமைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும் என்ற கோஷமே பிரதானமாக இருந்ததது. இந்த வழக்கின் போக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் அரசியல் தொடர்பு இருப்பதாக சித்தரித்து இதில் ஆளும்கட்சியில் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வந்தன.

முக்கியமாக இந்த செய்தியை ஆளும்கட்சியோடு தொடர்புபடுத்திய பத்திரிக்கை நக்கீரன், வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற தளங்களில் திமுகவின் மருமகன் சபரீசன் தலைமையில் உள்ள ஐடி பிரிவு தவறான கருத்துக்களை வெளியிட்டுவந்தனர். அதனால் அனைத்து தரப்பு மக்களிடமும் ஆளும்கட்சி மீதான நம்பகத்தன்மை குறைந்தது.

இந்த வழக்கை கவனித்துவந்த ஆளும்கட்சி இதற்கு காரணம் யார் என்பதை கண்டறிந்து அவர்கள் மீது வழக்கு பதிய தொடங்கியது. இதற்கு முக்கியகாரணியாக திமுக ஸ்டாலின் அவர்களின் மருமகன் சம்மந்தப்பட்டிருப்பது தெரியவந்தநிலையில் அவர்மீதும், நக்கீரன் ஆசிரியர் மீதும் வழக்கு பதிந்தது தமிழக காவல்துறை.

பிறகு இந்த விவகாரம் குறித்து எந்த ஒரு தவறான தகவலும் வெளியாக வில்லை. தற்போது பொள்ளாச்சி வழக்கு விசாரனை சிபிசிஐடி காவல்துறை வசம் ஒப்படைக்க தற்போது இந்த வழக்கில் தொடர்புடையவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.

Sharing is caring!

shares