பருவமழை பொய்த்து போனதால் கொடைக்கானலில் பிளம்ஸ் விளைசல் வீழ்ச்சி : விவசாயிகள் கவலை

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல் மலை மற்றும் கீழ்மலை கிராமங்களில் மக்கள் விவசாயத்தையே நம்பி உள்ளனர். பெரும்பாலோனோர் ப்ளம்ஸ் , பட்டாணி , பீட்ரூட் , கேரட் உள்ளிட்டவை விவசாயம் செய்து வருகின்றனர்..இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்து போயுள்ளது .. இதனால் விவசாயத்திற்கு ஏற்ற மழை இல்லாததால் பயிர்கள் கருகியும் பயனற்ற நிலையில் மாறியது. தொடர்ந்து பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பிளம்ஸ் சீசன் துவங்கும் ஆனால் பருவமழை இல்லாததால் விளைச்சல் குறைந்துள்ளது. விளைச்சல் குறைந்துள்ளதால் விலையும் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Sharing is caring!

shares