கரூர் பசுபதீஸ்வரர் ஆலய பங்குனி உத்திர விழா

கரூரில் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திர திருவிழாவை முன்னிட்டு உற்சவர் திருவீதி உலாவில் சுவாமி குதிரை வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த பின் திருவிழா நடைபெற்றது

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் பங்குனி மாத உற்சவர் திருவிழாவில் இன்று சுவாமி கல்யாணபசுபதீஸ்வரர் மற்றும் சௌந்தரநாயகி ,அலங்காரவல்லி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சிறப்பு தோற்றத்தில் குதிரை வாகனத்தில் அமர செய்து ஆலயம் முன்பு இருந்துஆலயம் சுற்றி வலம் வந்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் பழத்துடன் வழிபாடு செய்து சுவாமி கல்யாணபசுபதீஸ்வரர் மற்றும் அருள்மிகு அலங்காரவல்லி, சௌந்திரநாயகி அம்மனை மனம் உருகி தரிசித்தனர்.

சுவாமி கல்யாணபசுபதீஸ்வரர் மற்றும் அலங்காரவல்லி சௌந்தரநாயகி அம்மன் குதிரை வாகனத்தில் காட்சியளித்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண் குளிர
கண்டு களித்தனர்.

Sharing is caring!

shares