இந்தியாவை விட்டு வெளியேறுகிறது மதமாற்றும் நிறுவனம் கம்பேஷன் இன்டர்நேஷனல்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு மதமாற்றும் பணி களில் ஈடுபட்டிருந்த “கம்பேஷன் இன்டர்நேஷனல்” எனும் அமெரிக்க பெந்தகொஸ்தே என்.ஜி.ஓ. அமைப்பு. இந்த ஆண்டு மார்ச் 15-ம் தேதி முதல் “சிந்தாந்த வேறுபாடு” காரணமாக
கடையைச் சாத்துகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் ரூ. 300 கோடி அளவுக்கு தொண்டு நிறுவனம் என்று சொல்லி “மத மாற்றம் பணிகளுக்காக” இந்த நிறுவனம் செலவிட்டு வந்தது. இதில் சிறப்பு என்னவென்றால் அனைத்து இந்தியாவிற்கும் சேர்த்து.. ‘பெரியார் மண்ணுக்கு” (தமிழகத்திற்கு) தான் இதுவரை அதிக நிதி வந்துள்ளது.

மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி வந்தது முதல், வெளிநாட்டிலிருந்து தவறான வழிகளில் பணம் கொண்டுவரும் – பணம் பெறும் என்.ஜி.ஓ.க்களின் வங்கிக் கணக்குகள் தீவிர கண்காணிப்புக்கு உள்படுத்தப்பட்டன. மேலும், கடும் தணிக்கைக்கு உள்ளாயின. விளைவு, இப்போது இந்தியாவை விட்டு அந்த என்.ஜி.ஓ.க்கள் ஓடத் தொடங்கியுள்ளன. ( சில அமைப்புகள் எப்படியாவது இந்த தேர்தலில் மோடி தோற்றுவிட்டால் பழையபடி தங்கள் வியாபாரத்தை கடை விரிக்கலாம் என்ற நப்பாசையில்.. தம் பிடித்து நிற்கின்றன.. இவர்களுக்கு மே மாத result பழையபடி மோடியே பிரதமர் என்று தெரிந்துவிட்டால்.. கப்பலேறி தங்கள் தாய் நாடு செல்வதைத் தவிர வேறு வழி இல்லை.)

கம்பேஷன் இன்டர்நேஷனல் அமைப்புக்காக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெட்ரி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேச்சு நடத்தினார் என்றால், அந்த அமைப்பின் வலிமையை நாம் புரிந்துகொள்ள முடியும்.

முன்னதாக, ஜூன் 7-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் அந்த அமைப்புக்காக இந்திய அரசுக்கு கடிதமும் எழுதியிருந்தனர்.

கடந்த பல வருடங்களில் வந்த வெளி நாட்டு பணத்திலும் பெருமளவு வரி ஏய்ப்புகள், வேறு காரணம் சொல்லி பெறப்பட்ட நிதிகளுக்கு முறையான கணக்கு இல்லை என்பது கூடுதல் தகவல்.

என்ன மக்களே திரு நரேந்திர மோடிக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்று விஷயம் புரிகிறதா..?

இது போல பல நூறு “விஷயங்கள்” உள்ளன. இது ஒரு சாம்பிள் தான்.

Sharing is caring!

shares