பாஜக-வின் டிஜிட்டல் திரை பிரச்சார வாகனத்துடன் களம் இறங்கியது

பா.ஜ., அரசு மேற்கொண்ட சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்ய, பா.ஜ.,வின் பிரமாண்ட பிரசார வாகனம், கோவையில் களமிறக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்துக்கு, அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில், பா.ஜ., முன்னணியில் உள்ளது. இக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில், அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரசார வாகனம் பயன்படுத்தப்படுகிறது.

பிரமாண்ட திரை கொண்ட இந்த வாகனம், பா.ஜ., வேட்பாளர் களம் இறங்கும் கோவை லோக்சபா தொகுதிக்கு நேற்று வந்து சேர்ந்தது. கோவை கலெக்டர் அலுவலகம் கொண்டு வரப்பட்ட இந்த வாகனத்தை, போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து, அனுமதி வழங்கினர்.

இதையடுத்து, உடனடியாக, ஆர்.எஸ்.புரம், சாய்பாபாகாலனி, வடவள்ளி, சித்தாபுதுார் பகுதிகளில், பிரசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டது.பிரதமர் மோடி அரசு மேற்கொண்ட சாதனைகள், செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய வீடியோ காட்சிகள், இந்த வாகனம் மூலம், பொதுமக்கள் கூடும் இடங்களில் திரையிடப்படுகின்றன. பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நேரடியாக ஒளிபரப்பும் வசதியும்
வாகனத்தில் உள்ளது.

‘கோவை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும், இந்த வாகனம் பிரசாரத்தில் ஈடுபடுத்தப்படும்’ என்று, பா.ஜ., கட்சியினர் தெரிவித்தனர்.

Sharing is caring!

shares