நியூசிலாந்தில் மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூடுக்குப் பிறகு, பிரதமர் மோடிக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநில போலீஸ் டி.ஜி.பி.,க்களுக்கும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி.,), என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்ற குறிப்புகள் அடங்கிய ரகசிய தகவலை அனுப்பி உள்ளது. 

மோடி, காங்., தலைவர்கள் சோனியா மற்றும் ராகுலுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்லில் இந்த 3 பேருமே போட்டியிடுகின்றனர். பிரசாரத்திற்காக தொடர்ந்து இவர்கள் பொது இடங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. அந்த நேரங்களில் இவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கும் அதே அளவு பாதுகாப்பு தரப்பட்டுள்ளதால், அவர் போட்டியிட்டாலும் பாதுகாப்பு கொடுப்பதில் சிரமம் ஏற்படும்.மொத்தம் 7 பேருக்கு அதிகபட்ச பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

1.பிரதமர் மோடி 2.சோனியா
3.ராகுல்
4.பிரியங்கா
5.ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்
6.காஷ்மீர் தலைவர் பரூக் அப்துல்லா
7.பரூக் மகன் ஒமர் அப்துல்லா
நியூசிலாந்தில் மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூடுக்குப் பிறகு, பிரதமர் மோடிக்கும் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே உலகில் அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படுபவர்களில் 7 வது தலைவராக மோடி இருக்கிறார்.

35 குழுக்களிடம் இருந்து மிரட்டல்:

ஏனெனில் மோடிக்கு 35 சர்வதேச பயங்கரவாத குழுக்களிடம் இருந்து மிரட்டல்கள் உள்ளன. பாகிஸ்தானில் இருந்து மட்டும் 8 பயங்கரவாத குழுக்கள் மோடியை குறி வைக்கின்றன.எஸ்.பி.ஜி.,யில் மொத்தம் 5600 வீரர்கள் உள்ளனர். ராணுவம், எல்லைப் பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எப்., தொழில் பாதுகாப்பு படை போன்ற படை பிரிவுகளில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள் இவர்கள். இதில் பிரதமரின் பாதுகாப்புக்கு 350 வீரர்கள் எப்போதும் தயாராக இருப்பர். தயாராக இருப்பர்.

இப்போதுள்ள பிரதமர், முன்னாள் பிரதமர், அவரது குடும்பத்தை பாதுகாக்கும் பணி இவர்களுடையது.
1985ல் தனி சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது எஸ்.பி.ஜி., இதை உருவாக்கியவர் அப்போதைய ஐ.பி.எஸ்., அதிகாரியும் தமிழருமான சுப்பிரமணியன்

.பிரதமரின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இவர்களது பணி. மிரட்டல், பயங்கரவாதிகள் தாக்குதல், இயற்கை பேரிடர் போன்றவற்றில் இருந்து பிரதமரை இவர்கள் பாதுகாக்க வேண்டும்.

4 அடுக்கு பாதுகாப்பு:

பிரதமருக்கு 4 அடுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அவருடன் இருப்பவர்கள் எஸ்.பி.ஜி.,யினர். அடுத்த கட்டத்தில் இருப்போர் சி.ஆர்.பி.எப்., வீரர்கள்.

3வது கட்டமாக இருப்பவர்கள் மாநில உளவுத்துறை போலீசார், 4வது கட்டமாக இருப்போர் அந்தந்த மாநில போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருப்பர்.எஸ்.பி.ஜி.,யிடம் ஒரு விசேஷ ஜாமர் வாகனம் இருக்கும்.

பிரதமர் இருக்கும் இடத்தில் எந்த வெடிகுண்டு இருந்தாலும் , வெடிகுண்டை இயக்க செய்யும் ரிமோட்டை ஜாமர் கருவி செயல் இழக்க செய்துவிடும்.

பிரதமர் எங்கு சென்றாலும் அங்கு டில்லியில் இருந்து புல்லட் புரூப் கார்களை விமானப்படை விமானம் கொண்டு சென்று விடும்.பிரதமர் காரைச் சுற்றி எப்போதும் 5 எஸ்.பி.ஜி., வீரர்கள் இருப்பர். பிரதமர் எங்காவது சென்றால், அங்கு பாதுகாப்பு நன்றாக இருக்கிறது என்று இவர்கள் கூறினால் தான், காரை விட்டு பிரதமர் இறங்க முடியும்.
இந்த 5 பேரும் புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்திருப்பர்.

ஏதாவது குண்டு வெடித்தாலோ கலவரம் ஏற்பட்டாலோ பிரதமரை சுவர் போல நின்று காப்பாற்றுவர்.இவர்களில் ஒருவர் எப்போதும் கையில் ஒரு கறுப்பு பை வைத்திருப்பார்.

இதில் தான் ‛எலக்ட்ரானிக்’ பாதுகாப்பு கருவி இருக்கும். ஏதாவது நெருக்கடி என்றால் இந்த கருவி இயக்கப்பட்டு, பிரதமரைச் சுற்றி எலக்ட்ரானிக் சுவரை ஏற்படுத்தி விடும். எந்த ரிமோட் கருவியையும் இந்த சுவர் செயல் இழக்க செய்து விடும்.

கறுப்பு கண்ணாடி எதற்கு ?

எஸ்.பி.ஜி., வீரர்கள் எப்போதும் கறுப்பு கண்ணாடி அணிந்திருப்பர். ஸ்டைலுக்காக இவர்கள் கண்ணாடி அணிந்திருக்கின்றனர். என்று பலர் நினைக்கின்றனர். அது உண்மையல்ல. பிரதமருடன் இருக்கும் இவர்கள், தலையை திருப்பாமல், கருவிழியை மட்டும் 360 டிகிரிக்கு திருப்பி, சுற்றிலும் கண்காணித்துக்கொண்டே இருப்பர். அப்போது தான், எந்த திசையில், யாரை வீரர் கண்காணிக்கிறார் என்று வெளியே தெரியாமல் இருக்கும்.

எஸ்.பி.ஜி., சட்டப்படி பிரதமர் தனியார் வாகனங்களில் பயணம் செய்யக் கூடாது. எஸ்.பி.ஜி.,யின் புல்லட் புரூப் காரில் தான் பிரதமர் எப்போதும் பயணிக்க வேண்டும். பிரதமர் எங்கு செல்கிறாரோ அந்த இடத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே சென்று, பார்த்துவிடுவர். எஸ்.பி.ஜி., வீரர்கள்.ஒத்திகையிலும் ஈடுபடுவர்.
பிரதமர் எங்கு செல்கிறாரோ அந்த மாநிலத்தின் டி.ஜி.பி., நகர போலீஸ் கமிஷனர்கள் தான் பிரதமரின் பாதுகாப்புக்கு பொறுப்பு. எனவே டி.ஜி.பி.,க்களுடன் எஸ்.பி.ஜி., தொடர்பு வைத்திருக்கும்.

Sharing is caring!

shares