கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதுார், கிருஷ்ணகிரி, திருச்சி கேட்கும் தொகுதிகள் கேட்கும் தே.மு.தி.க.,

அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதுார், கிருஷ்ணகிரி, திருச்சி அல்லது விருதுநகர் தொகுதி களை, தே.மு.தி.க., கேட்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் தே.மு.தி.க., தலைமை தேர்வு செய்துள்ளது.

இதன்படி, கள்ளக்குறிச்சியில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போட்டியிட உள்ளார். ஆனால், ‘தன்னை வேட்பாளராக நிறுத்துங்கள்’ என, விழுப்புரம் மாவட்ட செயலர், வெங்கடேசனும் கேட்டு உள்ளார். திருச்சியில், மாநில மாணவரணி செயலர், விஜயகுமாரை களமிறக்க கட்சி தலைமை விரும்புகிறது.

கிருஷ்ணகிரியில், கட்சியின் அவைத் தலைவர் இளங்கோவன், மாவட்டசெயலர் அன்பரசன் ஆகியோரில் ஒருவர், வேட்பாளராக நிறுத்தப்படலாம். விருதுநகரில் மாவட்ட செயலர், செய்யது காஜா ஷெரிப்பை தேர்வு செய்ய, கட்சி தலைமை விரும்புகிறது. வடசென்னையில், மாநில துணை செயலர் பார்த்தசாரதி அல்லது மாவட்டசெயலர் மதிவாணன் நிறுத்தப்படலாம். ஆனால், கள்ளக்குறிச்சி, ஸ்ரீபெரும்புதுார், வடசென்னை, திருவள்ளூர் தனி தொகுதிகளை ஒதுக்க, அ.தி.மு.க., விரும்புகிறது.

தே.மு.தி.க., வேட்பாளர்களுக்கான நேர்காணல், அக்கட்சியின் தலைவர், விஜயகாந்த் முன்னிலையில் மார்ச் 13ல் நடக்கிறது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஒரே நாளில் நேர்காணலை நடத்துகிறார்.

Sharing is caring!

shares