ஜம்மு &காஷ்மீரில் மோடியின் அதிரடி

மோடி அரசு ஜம்மு காஷ்மீரில் உள்ள 370சரத்தில் சில திருத்தங்கள் கொண்டுவந்திருக்கிறதுஇதன் மூலம் அங்குள்ள SC/ST மக்கள் வேலை வாய்ப்பு பெறலாம்.”The J&K Reservation (amendment) ordinance 2019.இதன் மூலம் வரப்போகும் நன்மைகளை பார்ப்போம்.

1.கவர்னர் கீழே ஆட்சி நடக்கும் ஜம்மு மற்றும் காஷ்மீர்-740 கிலோமீட்டர் (LOC)எல்லைக்கோடு வரை இந்திய ராணுவத்தின் கையிலும்,192 கிலோ மீட்டர் BSF கட்டுப்பாட்டிலும் உள்ளது.

2.இங்கு பல நாட்கள் சண்டை நடந்து வருவதால் எந்த விதமான முன்னேற்றம் இல்லை.மேலும் இந்த எல்லைக்கோட்டு வரை உள்ளவர்கள் பிற்படுத்தப்பட்ட சலுகையை அனுபவித்துவருகின்றனர்.

3.ஆனால் சர்வதேச எல்லைக்கோட்டில் வாழ்பவர்களுக்கு இந்த சலுகைகள் கிடையாது.அதற்காக எடுக்கபப்பட்ட நடவடிக்கைதான் இது.அங்கு எந்த ஆட்சியும் இல்லாததால் மத்திய அரசே தனி மசோதாவாக ஜனாதிபதி ஒப்புதலுடன் செய்கிறார்கள்.இங்கு 10% வருமானவரம்பு கீழே உள்ளவர்களுக்கு இந்த சலுகை உபயோகப்படும்.

4.2004/05 சரத்துப்படி ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருப்பவர்கள் வேலை வாய்ப்பில்,கல்லூரிகளில் இந்த எல்லா சலுகைகளையும் பெறுகின்றனர்.இந்த மசோதாவிற்கு பிறகு எல்லைக்கோட்டில் வாழும் அனைவரும் (பிற்படுத்தப்பட்ட ஏரியா,எல்லைக்கோட்டின் அருகே வாழும் மக்கள்,முன்னாள் ராணுவ வீரர்கள், ஊனமுற்றோர்)இதன் மூலம் பயன் பெறுவர்.

5.இதன்பிறகு எந்தவித பாகுபாடில்லாமல் எல்லைக்கோட்டில் வாழ்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

6.அடிக்கடி சர்வதேச எல்லையில் சண்டை நடப்பதால்,அடிக்கடி வீடுகளை விட்டும், வேலையும் கிடைக்காமல்,பல நாட்கள் பள்ளிக்கூடங்களும்,கல்லாரிகளும் மூடியே இருப்பதால் வாழ்க்கைத்தரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.இந்த சலுகை இவர்களுக்கும் கிடைக்கும்படி இந்திய அரசாங்கம் செய்திருக்கிறது.

7.மேலும் மத்திய அரசு கேபினட் மூலம் 77 மற்றும்103 செக்க்ஷன்படி சில திருத்தங்கள் செய்திருக்கிறார்கள்.
77-என்பது ஜாதிரீதியான ஒதுக்கீட்டை அனுமதிப்பது.103-10%இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் நடைமுறை ப்படுத்துவது.

RegionalandRegionalparity;

இது மிக முக்கியமான விஷயம்.இது பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட விஷயம்.இதை முந்தைய மாநில,மத்திய அரசுகள் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்ற முறையையே வைத்திருந்தார்கள். ஆனால் மோடி ஆரசாங்கம் மதச்சார் பில்லாத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கிறது.இதனால் புத்த மதத்தை சேர்நாதவர்கள்,ஹிந்துக்கள்,இதை பயன் படுத்தலாம்.இதையே 35A,Art 370 கை வைக்காமல் மாற்றத்தை கொண்டு வந்
திருக்கிறார்கள்.

இதனால் நாட்டில் எல்லா இடத்திலும் ஒரே முறையான ஒதுக்கீட்டை கொண்டு வர முடியும்.ஜம்மு,லடக் மக்கள் ஒரு நாடு,ஒரு தேசம்,ஒரே கொடி என்ற கோரிக்கைக்காக போராடியும் முந்தைய அரசாங்கம் இதை செய்யவில்லை.மோடி அரசாங்கம் துணிச்சலுடன் இதை செய்திருக்கிறார்கள்.இதற்கு முன்னால் காஷ்முரில் வாழ்ந்தவர்கள் மட்டுமே பெற்ற சலுகை எல்லாராலும் பெறப்படும்.

Sharing is caring!

shares