இந்திய ராணுவ ‘கேப்’ அணிந்த இந்திய வீரர்கள் – நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கோரிக்கை

RANCHI, INDIA - MARCH 08: Virat Kohli of India leads his team out during game three of the One Day International series between India and Australia at JSCA International Stadium Complex on March 08, 2019 in Ranchi, India. (Photo by Robert Cianflone/Getty Images)

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் பீல்டிங் மற்றும் பேட்டிங்கின் போது ராணுவ தொப்பி அணிந்து விளையாடினர். புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் கொல்லட்ட துணை ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்திய வீரர்கள் ராணுவ கேப் அணிந்தனர். 

இந்நிலையில், ராணுவ கேப் அணிந்து இந்திய வீரர்கள் விளையாடியதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி வலியுறுத்தியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய குரேஷி, “தன்னுடைய சொந்த தொப்பிக்கு பதிலாக ராணுவ தொப்பியை அணிந்து இந்திய அணி விளையாடியதை உலகமே பார்த்தது. ஐசிசி பார்க்கவில்லையா?. ஐசிசி தானாக முன் வந்து இந்திய அணி மீது நடவடிக்க எடுக்க வேண்டும்” என்று கூறினார். 

மேலும், பாகிஸ்தான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஃபவட் சவுத்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இது வெறும் கிரிக்கெட் இல்லை. இந்திய அணி இதனை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால், காஷ்மீரில் நடக்கும் இந்திய அரசின் கொடுமைகளை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் பாகிஸ்தான் வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து விளையாட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Sharing is caring!

shares