துரைமுருகன் வீட்டை முற்றுகையிட்ட தேமுதிகவினர் திமுக இடையே மோதல்

திமுக பொருளாளர் துரைமுருகனின் காட்பாடி வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்ட தேமுதிகவினர் திமுகவினரும் பெருமளவில் திரண்டதால் மோதல் ஏற்பட்டது.

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள, திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டினை, முற்றுகையிடுவதற்காக தேமுதிகவினர் திரண்டனர். காட்பாடி ஓட்டப்பிள்ளையார்கோவில் பேருந்து நிறுத்தத்திலிருந்து, துரைமுருகன் வீட்டை நோக்கிச் செல்ல முயன்ற தேமுதிகவினரை, வழியிலேயே, போலீசார் தடுத்து நிறுத்தினர்…

தேமுதிகவினர் முற்றுகையிட வருவதை அறிந்து, மறுபுறத்தில் திமுகவினர் திரளாக குழுமினர். இதனால், பதற்றமான சூழல் உருவானது. இதனையடுத்து, இருதரப்பையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, தேமுதிகவினரும், திமுகவினரும், போலீசார் முன்னிலையில், பரஸ்பரம் வசைபாடி கொண்டனர்.

பின்னர், இருதரப்பையும் ஒருவழியாக அமைதிப்படுத்திய போலீசார், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற தேமுதிகவினரை, பெரும் தள்ளுமுள்ளுவிற்கு பிறகு கைது செய்தனர். தேமுதிகவினரின் முற்றுகை முயற்சியைத் தொடர்ந்து, திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் அக்கட்சியினர் திரண்டுள்ளனர்.

Sharing is caring!

shares