ஸ்டாலினுக்கு புத்தி பேதலித்து விட்டது ஹெச்.ராஜா

அதிமுக பாஜக கூட்டணியில் இணைந்த பாமகவை வெட்கம் மானம் சூடு சொரணை இருந்திருந்தால் அந்த கூட்டணியில் இணைந்து இருக்கமாட்டார்கள் என கடுமையாக விமர்சித்து இருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவின் ஹெச்.ராஜா ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் ஸ்டாலினுக்கு புத்தி பேதலித்து விட்டது என கடுமையாக விமர்சித்துள்ளார்

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கூட்டணிக் கட்சித் தலைவரையும் பிரதமர் மோடியும் தவறாக பேசினால் தாங்கிக் கொள்ள முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஸ்டாலினை கடுமையாக எச்சரித்தார்

காமராஜரை கேவலமாக பேசிய கட்சி திமுக அதனுடன் தற்போது காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறினார்

இந்த வலுவான கூட்டணியை தாங்கிக்கொள்ள முடியாத ஸ்டாலின் புத்தி பேதலித்து வாய்க்கு வந்தபடி உளறிக் கொண்டிருக்கிறார் அவரால் ஒரு பழமொழியை கூட பிழையில்லாமல் சொல்ல முடியவில்லை என கடுமையாக விமர்சித்துள்ளார்

Sharing is caring!

shares