ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு

ஜம்மு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் 18 பேர் காயம் அடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து குண்டு வெடித்த பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பேருந்து நிலையம் கடைகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Sharing is caring!

shares