இந்தியாவை தாக்க ஜெய்ஷ் ஈ இயக்கத்தை இம்ரான் பயன்படுத்தினார் : முஷாரப் குற்றச்சாட்டு

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை தடை செய்ய வேண்டும் எனவும், அதன் தலைவர் மசூத் அசாரை ஒப்படைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான ஆதாரங்களை இந்தியா வழங்கியுள்ள போதிலும், அதனை பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

ஜெய்ஷ் இ முகமது என்ற இயக்கமே பாகிஸ்தானில் இல்லை என்றும், மசூத் அசார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவ மேஜர் கபூர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் அளித்துள்ள பேட்டியில், இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை பாகிஸ்தான் உளவுத்துறை பயன்படுத்தியதாக தெரிவித்தார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தன்னை கொலை செய்ய ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.

Sharing is caring!

shares