இந்தியா தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் எல்லையில் பாகிஸ்தான் படைகள் குவித்து வருகிறது

எல்லையில் படைகள் குவிப்பதை பாகிஸ்தான் அதிகரித்து வருகிறது.பாகிஸ்தான் படைகளுடன் இந்தியப் படைகள் கடந்த இரண்டு நாட்களாக கடுமையான துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் ஹண்டவாரா பகுதியில் தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரின் ரோந்து வாகனம் மீது தாக்குதல் தொடுத்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். 30க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் பலமான ஆயுதங்களுடன் இந்தியப் படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்தியப் படையினரும் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனிடையே எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பெருமளவில் படைகளைக் குவித்து வருகிறது. இந்திய-பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் பதற்றத்தைத் தணிக்க தொலைபேசியில் பேச்சு நடத்தினர்.

அப்போது அப்பாவி மக்கள் வசிக்கும் கிராமங்களின் மீது பாகிஸ்தான் பீரங்கிக் குண்டுகளை வீசுவது குறித்து இந்திய ராணுவ உயரதிகாரிகள் புகார் அளித்தனர்.இதனை உடனடியாக நிறுத்தாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று இந்தியா பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sharing is caring!

shares