பாகிஸ்தானுக்கு இனி இஸ்ரேல் பாணியில் பதிலடி… மாறும் இந்திய வியூகம்!

காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலிய சிறப்பு கமாண்டோ படையினரால், தீவிரவாத முகாம்களை விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வியூகங்கள் மூலம் அழிப்பது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் இந்திய ராணுவ கமாண்டோ படையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள், இஸ்ரேல் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து அதிகரித்துவரும் பதற்றங்களுக்கு இடையே, இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடக்கும் பட்சத்தில், கடந்த காலங்களைப் போன்றில்லாமல் , தற்போது பின்பற்றத் தொடங்கியுள்ள இஸ்ரேல் பாணியில் இறங்கி அடிக்கும் தாக்குதல் வியூகங்களையே தொடர்வது என்று, இந்தியா தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முந்தைய காலங்களில் பாகிஸ்தான் தன்னிடம் உள்ள அணு ஆயுதத்தைக் காட்டியும் மிரட்டல் விடுத்து கொண்டிருந்தது.

நம்மை ஆண்டு கொண்டு இருந்த காங்கிரஸ் கட்சி மிகவும் கோழைத்தனமாக இருந்தது மேலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுத்தால் முஸ்லிம்கள் வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்று அமைதியாக இருந்து நம் நாட்டு ராணுவத்தை கைகளைக் கட்டி போட்டது, . இன்னொரு பக்கம் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்தன

இதனால், பாகிஸ்தானுக்கு வசதியாகப் போய்விட்டது. “இந்தியாவால் ஒன்றும் செய்ய முடியாது. அதிக பட்சம் போனால், தூதரகரீதியில் பல்வேறு நாடுகளிடமும் தாக்குதல் பிரச்னையைக் கொண்டு செல்லும் ,,

பாகிஸ்தான் தனது மண்ணிலிருந்து இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை ஊக்குவித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்த அறிவுறுத்துங்கள் என்று புலம்பும். அதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளும், `பயங்கரவாதிகளை ஊக்குவிக்காதீர்கள்’ என்று நம்மிடம் சொல்வார்கள். நாமும், `தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு எங்கள் நாடுதான். எங்கள் மண்ணில் தீவிரவாதச் செயல்களுக்கு ஒருபோதும் இடமில்லை’ என்று சொன்னால், பிரச்னையின் வீரியம் சில நாளில் காணாமல் போய் விடும். நாம் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான நிழல் யுத்தத்தைத் தொடரலாம்” என்ற எண்ணத்தில்தான் பாகிஸ்தான் இருந்துவந்தது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக் – புல்வாமா தாக்குதல் 

ஆனால், இந்தியா இனியும் தொடர்ந்து அதே போன்று இருக்காது என்பதை பாகிஸ்தானுக்கு உணரவைத்தது தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக். 2016-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் தேதி

இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படை, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைக் கோட்டுப் பகுதிக்குள் சுமார் 2 கிலோமீட்டர் வரை ஊடுருவிச் சென்று தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில், 7 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும், 30-க்கும் அதிகமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், அப்படி ஒரு தாக்குதல் எதுவும் நடத்தப்படவில்லை என்றும், இந்திய ஊடகங்கள்தாம் அப்படி ஒரு தாக்குதல் நடந்ததாகச் செய்தி வெளியிடுகின்றனவே தவிர, பல உலக நாடுகள் அதை நம்பவில்லை என்றும் சொல்லியது.

கூடவே எல்லைக் கட்டுப்பாடுக் கோட்டுப் பகுதியிலும், பலுசிஸ்தானிலும் பாகிஸ்தான் ராணுவத்துக்குத் தொடர்ந்து மிகக் கடுமையான இழப்புகள் ஏற்பட்டன. இதுகுறித்த செய்திகள், ஊடகங்களில் பெரிதாக வெளியாகவில்லை.

இந் நிலையில் தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் நாங்கள் பயந்துவிடவில்லை என்று காட்டுவதற்காக, புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் திட்டமிட்டது. உள்ளூர் தீவிரவாதியைக்கொண்டு தாக்குதல் நடத்தினால், அது உள்நாட்டிலேயே நடந்த தாக்குதலாகவே கருதப்படும். அதை மட்டுமே காரணமாக வைத்து போர் தொடுக்கும் அளவுக்கு இந்தியாவால் செல்ல முடியாது. 
என்று நினைத்தது

இந்தியாவுக்குக் கிடைத்த லைசென்ஸ்

ஆனால், பாகிஸ்தான் எதிர்பார்க்காத வகையில் இந்த முறை, புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மண்ணிலேயே பல கிலோமீட்டர் தூரத்துக்கு ஊடுருவிச் சென்று இந்திய விமானப் படை, தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தி விட்டுத் திரும்பியது.

இந்தத் தாக்குதலில் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டனவா… இல்லையா, தீவிரவாதிகள் கொல்லப்பட்டனரா.. என்று உள்ளூர் தேசத்துரோக காங்கிரஸ் சொல்லி வரும் நிலையில் கடந்த 48 ஆண்டுகளில் இல்லாத வகையில் அந்த நாட்டின் உள்பகுதிக்குள் சென்று இந்திய விமானப்படை குண்டு வீசிவிட்டு வந்திருப்பது அப்பட்டமான உண்மை.

இதன் மூலம், இந்தியா உலக நாடுகளுக்குச் சொன்ன செய்தி, `இது, தற்காப்புக்காக தீவிரவாத முகாம்கள் மீது நடந்த தாக்குதல்தானே தவிர, பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் அல்ல’ என்பதுதான். இது உலக நாடுகளின் மனதில் வெற்றிகரமாகப் பதியவைக்கப்பட்டது.

பாகிஸ்தானின் நட்பு நாடான சீனாவுக்கு கூட இதை ஏற்று கொள்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது. இது, பாகிஸ்தானுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்னொரு புறம் தூதரகரீதியாகவும் பல்வேறு நாடுகளுடன் பேசிய இந்தியா, புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் அடங்கிய கோப்புகளை அளித்ததோடு, தனது தாக்குதலையும் நியாயப்படுத்தி, சர்வதேச அரங்கிலிருந்து பாகிஸ்தானைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையையும் தீவிரப்படுத்தியது.

இந்தச் சூழலில்தான், பாகிஸ்தானும் பதிலடி கொடுப்பதாக நினைத்து காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்கள் மீது எஃப்-16 ரக விமானம் மூலம் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவமும், அதைத் தொடர்ந்து அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியபோது பாகிஸ்தான் பகுதியில் விழுந்து, அந்த நாட்டின் ராணுவத்தின் பிடியில் சிக்கிய நிகழ்வும் நடந்தன.

அபிநந்தன் சிக்கியது பாகிஸ்தான் தரப்புக்கு சற்று உற்சாகம் அளித்த நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் மூலம் `அபிநந்தனை உடனடியாக விடுவிக்கா விட்டால், விளைவுகள் வேறு மாதிரி இருக்கும்’ என பாகிஸ்தானுக்கு உணர்த்தப்பட்டதைத் தொடர்ந்தே, அவர் விடுவிக்கப்பட்டார்

மேலும், இனி இந்தியாவில் தீவிரவாத தாக்குதல் நடந்தால், பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களை இந்தியா தாக்கும் என்பதற்கான லைசென்ஸையும் உலக அரங்கில் இந்தியா பெற்று விட்டது. ஆக மொத்தத்தில், பாகிஸ்தானின் புல்வாமா திட்டம், அதற்கே வினையாகி போனது என்று தான் சொல்ல வேண்டும்.

இனி இறங்கி அடிக்கும் இஸ்ரேல் பாணி!

பாகிஸ்தானை எதிர் கொள்ளும் இந்தியாவின் வியூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கும், இறங்கி அடிக்கும் அணுகுமுறைக்குமான காரணம், சமீபகாலமாக இஸ்ரேல் நாடுடன் இந்திய நாடு காட்டும் நெருக்கமான உறவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அந்த நாடு அளிக்கும் யோசனைகளும், ராணுவ ஒத்துழைப்பும் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மோடி இஸ்ரேலுக்குச் சென்று திரும்பிய பிறகு, கடந்த ஆண்டு முதன் முறையாக இந்தியா வந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ, `தீவிரவாத தாக்குதல்களின் வலியையும் வேதனையையும் இரு நாடுகளும் உணர்ந்துள்ளதாகவும், அதேசமயம் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலிருந்து இந்தியாவும் இஸ்ரேலும் ஒருபோதும் பின்வாங்காது” என்றும் கூறியிருந்தார்.

புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் பிரதமர் மோடி என் நண்பன் ,, இந்தியா என் நட்பு நாடு ,, நாங்கள் உங்களுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு தருவோம் என்பதை நினைவுபடுத்துகிறோம் மறந்து விட வேண்டாம் என்ற கூறியது உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்து விட்டது

இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு எந்த அளவுக்கு நெருக்கமாக உள்ளது என்பது வெளிப்பட்டது.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலும், அப்படியான ஒரு இஸ்ரேல் யோசனை

பாகிஸ்தானில் இந்திய விமானப் படையினர் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளும் இஸ்ரேல் தயாரிப்பான `ரஃபேல் ஸ்பைஸ்-2000′ என்ற ரகத்தைச் சேர்ந்த குண்டுகள்தான் எனச் சொல்லப்படுகிறது.

மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இஸ்ரேலிடமிருந்து மேற்கொள்ளப்படும் ஆயுதக் கொள்முதலை இந்தியா அதிகரித்துள்ளது. 2017-ம் ஆண்டில் மட்டும் இஸ்ரேலிய விமானப் பாதுகாப்பு, ராடார் கருவிகள் மற்றும் வெடிமருந்துகள், விமானத்திலிருந்து விமானத்தைத் தாக்கும் ஏவுகணைகள் போன்றவற்றை 530 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்லாது, காஸாவில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேலியச் சிறப்பு கமாண்டோ படையினரால், தீவிரவாத முகாம்களை விமானத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வியூகங்கள் மூலம் அழிப்பது போன்ற பல பயிற்சிகள், இந்திய ராணுவ கமாண்டோ படையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள், இஸ்ரேல் சென்று பயிற்சி பெற்று வந்துள்ளனர். இந்திய ராணுவத்தின் வலிமைமிக்க 45 `கருடா கமாண்டோ’ படையினரில், 16 படையினருக்கு இஸ்ரேலின் இரண்டு விமானதளத்தில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த அளவுக்கு இந்தியா – இஸ்ரேல் இடையே ராணுவ உறவு நீடிக்கும் நிலையில், மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், இனி இஸ்ரேல் பாணியிலான தாக்குதலும், அந்த நாட்டின் ஆயுதங்களும் தாம் பாகிஸ்தானுக்கான இந்தியாவின் பதிலடியைத் தீர்மானிக்கும்!

Sharing is caring!

shares