திமுக பாகிஸ்தான் தீவிரவாதிகள் உடன் கைகோர்த்து கோ-பேக் -மோடி என்ற அஷ்டகை ட்ரெண்ட் செய்தது துக்ளக் இதழ் வெளியிட்ட தகவலை மேற்கோள் காட்டி ஹெச்.ராஜா பேட்டி

அந்நிய சக்திகளுடன் கை கோர்த்துள்ள திமுக கூட்டணியை வேரோடு வீழ்த்த வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் மோடி கோ பேக் என எழுப்பப்படும் கோஷம் தமிழகத்தின் கோஷம் அல்ல என துக்ளக் வார இதழில் வெளியான தகவலை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த உண்மையை தமிழகத்தில் எங்கு சென்றாலும் உணர முடியும் என்று கூறியுள்ள ஹெச். ராஜா, நாம் யோசிக்க வேண்டிய விஷயம் இந்த அந்நிய சக்திகளுடன் திமுக கூட்டணியினர் கைகோர்த்துள்ளதுதான் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த தேர்தலை இக்கும்பலை வேரோடு வழ்த்துவதுதான் என்றும் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போதெல்லாம், சமூக வலைதளங்களில் மோடி கோ பேக் என ஹாஷ்டாக் மூலம் டிரெண்டிங் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் இருந்து டிரெண்டிங் செய்பவர்கள் 2 சதவீதத்தினர் மட்டுமே என்றும், 58 சதவீதம் பாகிஸ்தானில் இருந்து டிரெண்டிங் செய்யப்படுவதாகவும் துக்ளக் இதழ் தெரிவித்துள்ளது. 

Sharing is caring!

shares