காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால் ஆந்திர மாநிலம் தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ திடீர் ராஜினாமா சந்திரபாபு நாயுடுக்கு பின்னடைவு

ஆந்திர மாநிலம் தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த வேணுகோபால் ரெட்டி தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வரும் சந்திரபாபு நாயுடு எதிராக அவரது கட்சியில் தற்போது எதிர்ப்புகள் வர தொடங்கி உள்ளது

மேலும் ஆந்திராவை இரண்டாக பிரித்த காங்கிரசுடன் தற்போது உறவு வைத்துக் கொள்வதை அவர்கள் விரும்பவில்லை என கருத்துக்கள் வெளிவருகின்றன.

இதன் காரணமாகவே வேணுகோபால் ரெட்டி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது மேலும் கட்சியில் உள்ள பலர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார் .. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக வேணுகோபால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமது ராஜினாமா கடிதத்தை அவர் சபாநாயகர் கோடல சிவபிரசாத்திடம் நேரில் கொடுத்தார். இதே போல் அக்கட்சியின் தலைவரான முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்து, கட்சியில் இருந்து தாம் விலகுவதாக கூறி கடிதத்தை அளித்தார்.

Sharing is caring!

shares