இம்ரான்கான் நோபல் பரிசுக்கு ஏற்றவர்- முன்னாள் நீதிபதி கட்ஜூ சர்ச்சை பேட்டி

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நோபல் பரிசு பெறுவதற்கு தகுதியானவர் என இந்திய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த கோ நியூஸ் என்ற தொலைக்காட்சி சேனலுக்கு கட்ஜூ தொலைபேசி வாயிலாக பேட்டியளித்தார்.

அப்போது, இந்தியா, பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்ட போது, இம்ரான்கானின் பேச்சு சமநிலையாக இருந்தது என்று கூறினார்.

மேலும், மிகவும் தெளிந்தவராக போர் ஒரு தீர்வாக இருக்காது என்று தீர்க்கமாக கூறினார் என்ற பேசிய கட்ஜூ, நோபல் பரிசுக்கு இம்ரான்கான் மிகவும் தகுதியானவர் என்று தெரிவித்தார். கட்ஜூவின் இந்தப் பேச்சுக்கு இந்தியாவில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Sharing is caring!

shares