5700 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து AWACS விமானம் வாங்க மோடி அரசு திட்டம்

இந்தியா இஸ்ரேலிடம் இருந்து 800 மில்லியன் டாலர் செலவில் (around Rs 5,700 crore) மேலும் இரு “Phalcon” airborne warning and control system (AWACS) விமானங்கள் வாங்க உள்ளது.சுமார் 4577 கோடிகள் செலவில் air defence radars ஒப்பந்தத்திற்கு பிறகு இந்த ஒப்பந்தம் நடைபெற உள்ளது.

இந்தியாவிற்கு அதிகளவு இராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இஸ்ரேல் வளர்ந்து வருகிறது.மேலும் இந்த ரேடார்,விமானம் தளவாடங்களுடன் “Heron” surveillance மற்றும் armed drones கள், “Harop” killer unmanned aerial vehicles போன்றவற்றையும் வாங்க இந்தியா ஆர்வமாக உள்ளது.

பறக்கும் ரேடார் என கருதப்படும் இந்த ரேடார்கள் வானத்தில் பறக்கும் விமானப்படையின் கண்போல செயல்படும்.இதனை “eyes in the sky” எனவும் கூறுவர்.எதிரி நம்மீது ஏவும்
fighters, cruise missiles மற்றும் drones களை கண்காணிக்க வல்லது.மேலும் போர் என வந்தால் நமது விமானங்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்படும்.

இந்தியா இந்த அவாக்ஸ் விமானங்களை மிககுறைவான அளவே வைத்துள்ளது.மூன்று பால்கன் மற்றும் இரு நேத்ரா என ஐந்து விமானங்கள் தான் உள்ளன.

ஆனால் சீனா Jing-2000 “Mainring”, KJ-200 “Moth” மற்றும் KJ-500 விமானம் என 30 விமானங்கள் வரை வைத்துள்ளது.

பாகிஸ்தானை பொறுத்தவரை 8 சீன Karakoram Eagle ZDK-03 AWACS மற்றும் Swedish Saab-2000 AEW&C ஆகியவற்றை கொண்டுள்ளது.

Sharing is caring!

shares