மீண்டும் இந்திய மீது தாக்குதல் நடத்த தயார் ஆகும் பாகிஸ்தான் விமானப்படை தயார் நிலையில் இருக்கும்படி பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு

பாகிஸ்தான் விமானப்படை தயார் நிலையில் இருக்கும்படி அதன் தளபதி உத்தரவிட்டுள்ளார். இந்தியாவின் தாக்குதல்கள் தொடரும் என்பது போல் இந்திய விமானப் படைத் தலைவர் தானோவா பேசியிருப்பதையடுத்து சவால்கள் முடிந்துவிடவில்லை என்று பாகிஸ்தான் விமானப் படைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

படை வீரர்களுடன் கலந்துரையாடிய அந்நாட்டு விமானப் படைத் தளபதி மார்ஷல் முஜைத் அன்வர் கான், தொடர்ந்து கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி கேட்டுக் கொண்டார் .

இதனிடையே இந்தியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் எப்.16 அல்ல என்றும் சீனாவும் பாகிஸ்தானும் கூட்டாக உற்பத்தி செய்யக்கூடிய ஜேஎப் 17 விமானம்தான் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

Sharing is caring!

shares