தூத்துக்குடி வெற்றிவேட்பாளர் யார்? தமிழிசையா? கனிமொழியா?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பலம்வாய்ந்த கூட்டணியாக அதிமுக கூட்டணி அமைந்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பாஜக கூட்டணி 5 தொகுதிகளை பெற்று போட்டியிடுகிறது.

சமீபத்தில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் போட்டியிடுவதாக அறிவித்தார். பாஜக வட்டாரத்திலிருந்து வரும் தகவலின்படி அவர் தூத்துக்குடி தொகுதியை தேர்ந்தெடுத்தாக தெரிகிறது. திமுகவின் கனிமொழியும் தூத்துக்குடி தொகுதியை மையம் கொண்டு 1 வருடத்திற்கு முன்பே தேர்தல் வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது.

மேலும், தூத்துக்குடி தொகுதியில் பிரிவினைவாதிகள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தை நடத்தி அதில் பெரிய போராட்டமாக மாறியது அனைவரும் அறிந்ததே. ஸ்டெர்லைட் ஆலை திமுக ஆட்சிகாலத்தில் அனுமதிக்கப்பட்டு திமுக தலைவர் மறைந்த கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. அதனால் பூர்வீக தூத்துக்குடி மக்கள் ஆலையை அனுமதித்த திமுகவிற்கு வாக்களிப்பார்களா என்பதை பார்க்கவேண்டும்.

தமிழிசை செளந்தரராஜன் தமிழிசை பாஜக தலைவர் என்ற போதிலும் அவருக்கு தூத்துக்குடி தொகுதியில் நல்ல செல்வாக்கு இருப்பதாகவே கட்சி வட்டாரங்கள் சொல்லியுள்ளதால் அவர் அங்கு போட்டியிடுகிறார்.

பொருத்திருந்து பார்ப்போம் காட்சிகள் மாறுகிறதா? கன்னியாகுமரியை போல தூத்துக்குடி பாஜகவை தேர்ந்தெடுத்து வளர்ச்சி பாதையில் செல்லுமா என்று?

Sharing is caring!

shares