பொதுப் போக்குவரத்தில் ஒரே தேசம் ஒரே அட்டை திட்டத்தை பிரதமர் மோடி அகமதாபாத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

போக்குவரத்துத் துறை முழுவதையும் மின்னணு மயமாக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் தேசிய அளவில் பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து வாகனங்களில் ஒரே அட்டையைப் பயன்படுத்தி கட்டணத்தைச் செலுத்த முடியும். மேலும் இந்த அட்டையைப் பயன்படுத்தி சுங்கக் கட்டணத்தையும் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மெட்ரோ ரயில் கட்டணத்தையும், ரயில் நிலையங்களில் நடைபாதை கட்டணமும் இந்த அட்டை மூலம் செலுத்த முடியும்.

Sharing is caring!

shares