மத்திய இரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகிறார்

மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம் வருகிறார்

மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரிதுறை அமைச்சர் பியூஸ் கோயல் இன்று தமிழகம்  வருகிறார். காலை 10.50 மணியளவில் தூத்துக்குடியில் நாட்டு  மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அர்பணிக்கிறார். என்எல்சி இந்தியா நிறுவனமும், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்துள்ள 1000 மெகாவாட் அனல் மின்நிலையத்தை அவர் தொடக்கிவைக்கிறார். விருதுநகர் மற்றும்  இராமநாதபுரம் மாவட்டங்களில் 150 மெகா வாட் சூரியமின் நிலையங்களையும் காணொலிக்காட்சி மூலம் பியூஸ் கோயல் திறந்து வைக்கிறார். பா.ஜ.க. நிகழ்ச்சியில் பங்கேற்கும் புயூஸ் கோயல், சேலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உள்ளார்.

Sharing is caring!

shares