பாமகஅறிவுரைப்படி, 60 லட்சம் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 நிதியுதவி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ராமதாஸ் பாராட்டு

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார் ..

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும், 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, தலா 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும், என கடந்த மாதம் 11-ந் தேதி, சட்டப்பேரவையில முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்காக தமிழக பட்ஜெட்டில் ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்த நிதி உதவியை பெற தகுதியானவர்களை கண்டறியும் பணி, தமிழகம் முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 10 பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதை முதல்வர் பழனிசாமி வழங்கினார். 

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராமதாஸ், ஏழைகளின் வாழ்க்கை ஏற்றம் காணட்டும், வறுமை ஒழியட்டும் என பதிவிட்டுள்ளார். ஆக்கப்பூர்வமான அணுகுமுறை அசாதாரணமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் பதிவிட்டுள்ளார்.
 

Sharing is caring!

shares