பாகிஸ்தான் தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்தவில்லை என்றால் இந்திய ராணுவம் எல்லை தாண்டி பாகிஸ்தானை தாக்கியதுபோல் ஈரான் ராணுவம் தாக்கும்

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள அந்நாட்டு ராணுவ மேஜர் ஜெனரல் கஸ்ஸம் சோலிமானி ((Qassem Soleimani)), பாகிஸ்தான் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்டை நாடுகளுடனான எல்லையில் எப்போதும் பாகிஸ்தான் பதற்ற நிலையை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவர் கண்டித்துள்ளார். அணுகுண்டுகள் வைத்திருக்கும் பாகிஸ்தானால் சில நூறு தீவிரவாதிகளைக் கொண்ட குழுக்களை அழிக்க முடியவில்லையா? என்று கஸ்ஸம் சோலிமானி வினவியுள்ளார்.

தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Sharing is caring!

shares