நேற்று கட்சி ஆரம்பித்த திருமாவளவனுக்கு 2 சீட் எனக்கு 1 சீட்த்தனா அறிவாலயத்தில் ஆவேசப்பட்ட வைகோ

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி இறுதி செய்வதில் ஆர்வம் காட்டும் திமுக வைகோவை மட்டும் கண்டு கொள்ளாமல் அப்படியே விட்டு விட்டது வேறு வழியில்லாமல் திமுகவிற்கு ஆதரவு அளிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார் வைகோ

இந்த நிலையில் திமுக ஒரு 1 சீட் தான் வழங்க முடியும் என உறுதிபட தெரிவிக்க அண்ணா அறிவாலயத்தில்ஆவேசப்பட்டு இருக்கிறார் வைகோ நேற்று கட்சி ஆரம்பித்த திருமாவளவனுக்கு எல்லாம் 2 சீட்டு கொடுக்கும் போது எனக்கு ஏன் 1 சீட் தான என ஆவேசப்பட்டுள்ளார்

அதற்கு திமுக தரப்பு திருமாவளவனுக்கு தமிழகம் முழுவதும் செல்வாக்கிற்கு ஆனால் தங்களுக்கு 1 தொகுதியில் மட்டும் தான் செல்வாக்கு உள்ளது அதனால் 1 சீட் மட்டும் தான் வழங்க முடியும் என ஆவேசமாக பதில் அளித்துள்ளது

இதனால் ஆத்திரமடைந்த வைகோ பாதியிலேயே வெளியேறி விட்டார் ,மீண்டும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நாளை இறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் 1 நாடாளுமன்ற தொகுதி 1 ராஜ்யசபா எம்பி பதவி வழங்க திமுக தயாராக உள்ளதாக வைகோவிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது இதை வைகோ ஏற்று உள்ளதாக கூறப்படுகிறது

ஒரு காலத்தில் தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் தமிழகத்தின் எதிர்காலம் என்று கருதப்பட்ட வைகோ தற்போது ஒரு சீட்டுக்கு கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

இதற்கு காரணம் அவர் மாறி மாறி கூட்டணி வைத்ததும் மாறி மாறி அனைத்து தலைவர்களும் விமர்சிப்பதும் தான் காரணம் என கருதப்படுகிறது

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட பிஜேபி தலைமையிலான கூட்டணியில் 6 இடங்களைப் பெற்று இருந்தார் ஆனால் தற்போது மோடிக்கு எதிராக கருப்பு கொடி பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார் இதுபோன்ற மாறி மாறி கருத்துக்களை பதிவு செய்துகொண்டிருக்கும் அரசியல்வாதிகளே தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை என்பது நிதர்சனமான உண்மை

Sharing is caring!

shares