திமுக ஆட்சியில் நடுரோட்டில் வைக்கப்பட்ட பெரியார் சிலை அகற்றப்பட்டது இந்துக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

கடந்த 1981 ஆம் ஆண்டு திமுக கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது போக்குவரத்து விதிகளை மீறி தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெரியார் சிலை திறக்கப்பட்டு இருந்தது .

குறிப்பாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடுரோட்டில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு இருந்தது, இதை எதிர்த்து சமூக ஆர்வலர் செல்வராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது
.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் போக்குவரத்து விதிகளுக்கு முரணாக வைக்கப்பட்ட பெரியார் சிலையை அகற்ற உத்தரவிட்டது இதையடுத்து நேற்று இரவு 11மணிக்கு பெரியார் சிலை அகற்றப்பட்டது.

பெரியார் சிலை அகற்றப்பட்டதை இந்துக்கள் ஆத்தூர் பகுதியில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

இதை போல் கோவிலுக்கு முன் உள்ள அனைத்து பெரியார் சிலைகளையும் அகற்ற வேண்டும் என இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

Sharing is caring!

shares