என்னை வீழ்த்துவதற்காக ஒன்று சேர்ந்த ஊழல்வாதிகள்” – பிரதமர் மோடி ஆவேசம்

விமான தாக்குதல் குறித்த ஆதாரங்களை கேட்பதா என எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில், பாஜக கூட்டணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், தீவிரவாதிகளுக்கு எதிரான விமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பதாகவும், இதன் மூலம் இந்திய விமானப்படையை அவமதிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்களை கேட்கும் காங்கிரஸ் கட்சியினரின் அறிக்கைகள், எதிர் நாட்டினர் ஆதாயம் அடையும் வகையில் உள்ளதாகவும் மோடி விமர்சித்தார்.

Sharing is caring!

shares