விஜயகாந்த் மகன் மற்றும் ஓபிஎஸ் மகன் இடையே கடும் போட்டி தேனி தொகுதியில் போட்டியிட போவது யார் ?????

தேமுதிக – திமுக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டுவிட்டது. இதனையடுத்து, தேமுதிக உடனான கூட்டணி உடன்பாட்டினை இறுதி செய்யும் முனைப்பில் அதிமுக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 5 மக்களவை சீட், ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்க அதிமுக தரப்பில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில் தேமுதிக அவசர ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (மார்ச் 5) நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது கூட்டணி தொடர்பான தனது முடிவை நாளை மறுநாள் தேமுதிக அறிவிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது

கூட்டணி அறிவிப்பு அறிவிப்பதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது தேனி தொகுதி எனக் கூறப்படுகிறது தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் தேனி தொகுதியில் தனது மகன் விஜய பிரபாகரனை நிறுத்த வேண்டும் என்ற முடிவில் விஜயகாந்த் உள்ளதாக கூறப்படுகிறது

இதை சரிசெய்ய ஓபிஎஸ் மதுரை தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது… இந்த நிலையில் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த அதிகார அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Sharing is caring!

shares