போர் விமானி அபிநந்தனின் பெயரில் போலி டிவிட்டர் பாகிஸ்தானில் இருந்து செயல்படுகிறது???

இந்திய விமானப் படையின் போர் விமானி அபிநந்தனின் டிவிட்டர் கணக்கு என போலிகள் உருவாவதால் அதை நம்பவேண்டாம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

பாகிஸ்தான் வசமிருந்து விடுவிக்கப்பட்ட இந்திய போர் விமானி அபிநந்தனை வரவேற்று #WelcomeHomeAbhinandan என்ற ஹேஸ் டேக் உலக அளவில் டிவிட்டரில் முதலாவதாக டிரெண்ட் ஆனது.

அவரை நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து அதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் உலவின.

இந்நிலையில், விங் கமாண்டர் அபிநந்தனின் பெயரில் சிலர் போலியாக டிவிட்டர் கணக்கை உருவாக்கி கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். இது அபிநந்தனின் உண்மையான டிவிட்டர் கணக்கு என நம்பிய ஆயிரக்கணக்கானோர் அதைப் பின் தொடர்கின்றனர்.

சில விஷமிகள் பாகிஸ்தானில் இருந்து தவறாகப் பயன்படுத்தக் கூடும் எனக் கருதி, அது போலி ட்விட்டர் கணக்கு என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மேலும், அந்த கணக்கும் டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!

shares