கிருஸ்துவ குழந்தைகளுக்கு மட்டுமே அட்மிஷன் மதமாற்றத்தின் அடுத்த நகர்வு.

கோவை, குனியமுத்தூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் கான்வென்ட் பள்ளி ஒரு அறிவிப்பை பள்ளி வளாகத்தில் ஒட்டியது. அடுத்த வருடத்திற்கான சேர்க்கையில் கிருஸ்துவ குழந்தைகள் மட்டுமே சேர்கப்படுவதாக அறிவிப்பு இருந்தது அனைவரின் மத்தியிலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

கல்வித்துறை தனியார் மயமாக்கப்பட்டபின் இந்தியாவில் கிருஸ்துவ கல்வி நிறுவனங்கள் அதிகரிக்க தொடங்கின. மதமாற்றத்திற்கு முக்கிய கருவியாக கிருஸ்துவ மிஷினரிகள் பள்ளிகளை அதிகமாக பயன்படுத்துகின்றன. சேவை செய்கிறோம் என்ற நோக்கில் அரசிடம் அனுமதி வாங்கிகொண்டு பள்ளியில் இணையும் மாற்று மத குழந்தைகளுக்கும் கிருஸ்துவ போதனைகளை கட்டாயம் போதிப்பது, பொட்டு வளையல், மாலை அணிவிக்க கூடாது என கட்டளையிடுவது என சமீபத்தில் ஏராளமான செய்திகளை பார்த்திருப்போம். ஆனால், அனைத்தையும் மிஞ்சும் வகையில் தற்போது கிருஸ்துவ பிள்ளைகளை மட்டும் பள்ளியில் சேர்ப்போம் என ஒரு கல்வி நிறுவனம் தெரிவித்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

மதமாற்றத்தையே குறிக்கோளாய் துவக்கப்பட்ட பள்ளிகள் மதம் மாறினால்தான் பள்ளியில் கல்வியை கொடுப்போம் என்ற அளவிற்கு வந்துவிட்டனர். தற்போது அனைவரின் மத்தியிலும் தனியார் பள்ளி மோகம் என்பது கெளரவமாக பார்க்கப்படுகிறது. இதனால் அரசுபள்ளியை தவிர்த்து நாம் அனைவரும் மத மாற்றும் கிருஸ்துவ நிறுவனங்களின் தனியார் பள்ளியை நாடினால் இதுபோன்று அறிவிப்புகள் வரத்தான் செய்யும்.

Sharing is caring!

shares