ஐந்தாவது முறையாக கட்சி தாவி திமுகவில் இணையும் நாஞ்சில் சம்பத் ?????

நாஞ்சில் சம்பத் தமிழகத்தின் மிக முக்கிய பேச்சாளர்களில் ஒருவர் ஆரம்ப காலகட்டத்தில் திமுகவில் இருந்த இவர் பின் வைகோ தலைமையில் மதிமுக என்ற தனி கட்சி உருவான உடன் மதிமுகவில் இணைந்தார்

அப்போது அவர் மதிமுகவில் இணைந்ததற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து நாஞ்சில் சம்பத்தின் வீட்டை அடித்து நொறுக்கினார்கள் அந்த தருணத்தில் வைகோ புதிதாக அவருக்கு வீட்டை கட்டிக் கொடுத்தார் அதில் இருந்து வைகோ மற்றும் நாஞ்சில் சம்பத்துக்கு இடையிலானஉறவு மிகவும் ஆழமாக இருந்தது

2014 ஆண்டு நாஞ்சில் சம்பத்துக்கு வைகோவிற்கும் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக அவர் முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் அதிமுகவில் சரணடைந்தார்

அதில் அவருக்கு துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது அதனுடன் இன்னோவா காரும் வழங்கப்பட்டது அன்றிலிருந்து இனோவா சம்பத் என்றும் அழைக்கப்பட்டு வந்தார்

பின்னவர் ஊடகத்தில் பேட்டி கொடுக்கும்போது தடுமாறியதால் அதிமுகவின் கொள்கைகளுக்கு எதிராக பேசியதால் அதிமுகவின் கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் ஓபிஎஸ் இபிஎஸ் என மூன்றாக உடைந்த அதிமுகவில் டிடிவி தினகரன்க்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார் ஒரு கட்டத்தில் டிடிவி தினகரனின் வலது கையாக செயல்பட்டு கொண்டிருந்தவர்… தனக்கு சரியான மரியாதையை கொடுக்கவில்லை என கூறி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்

இந்த நிலையில் தற்போது அவர் மீண்டும் திமுகவில் இணைவார் என இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது அதை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்திலும் நாஞ்சில் சம்பத்தின் பெயரை குறிப்பிட்டு ஸ்டாலின் பேசியுள்ளார் கூடிய விரைவில் அவர் முறைப்படி திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது

Sharing is caring!

shares