இந்திய ராணுவம் ஜெய்ஷ் முகாம் மீது தாக்குதல் நடத்தி 300 சகோதரர்களை கொன்றது உண்மைதான் என மசூத் அசார் சகோதரன் தகவல்

ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மை தான் என பயங்கரவாதி மசூத் அசாரின் சகோதரன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூர தற்கொலைத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிராக இந்தியாவில் கொந்தளிப்பு மனநிலை ஏற்பட்டது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களி டையே அதிகரித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமா னப் படை சரமாரியாக குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் இதை மறுத்தது. ஆளில்லாத காட்டில்தான் இந்தியா குண்டு வீசியதாகக் கூறியது.

இந்நிலையில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் சகோதரன் மவுலானா அமர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், ’இந்திய விமானப்படை விமானங்கள், காஷ்மீர் இஸ்லாமியர்களுக்கு உதவுதற்காக ஜிகாதி பயிற்சி அளிக்கப்பட்ட மையத்தில் வெடி குண்டுகளை வீசியது. முகாம் பாதிக்கப்பட்டது உண்மைதான். இந்த தாக்குதலின் மூலம், இந்தியாவுக்கு எதிரான ஜிகாத்தை நாங்கள் தொடங்கி விட்டோம் என்பது உறுதியாகியுள்ளது’’ என்று அமர் கூறியுள்ளான்.
 

Sharing is caring!

shares