அபிநந்தனை போல் மீசை வைத்துக்கொள்ள இந்திய இளைஞர்கள் ஆர்வம் பெண்களும் ஆசை

பாகிஸ்தானில் சிக்கி அண்மையில் தாயகம் திரும்பிய இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் போன்று மீசை வைக்க இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவ பிடியில் சிக்கிய விமானப்படை வீரர் அபிநந்தனை, சர்வதேச நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக அந்நாட்டு அரசு அண்மையில் விடுவித்தது. அபிநந்தனின் வீர தீர செயலை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் பாராட்டி வரும் நிலையில், இளைஞர்கள் அவரை தங்கள் ஆதர்ச நாயகனாக கருதுவதாக குறிப்பிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களிலும் அபிநந்தனின் புகைப்படத்தை பதிவிட்டு, இளைஞர்கள் மற்றும் பெண்களும்
தங்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அபிநந்தன் வைத்துள்ள மீசையை போன்று மீசையை வைத்துக்கொள்ள இளைஞர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Sharing is caring!

shares