மத்திய ரயில்வே துறை அமைச்சராகிறார் பாஜக தேசிய செயலாளர் ஹச் ராஜா ??? அமித் ஷா பச்சைக்கொடி

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக பாஜக பாமக என மெகா கூட்டணி அமைத்துள்ள பிஜேபி அதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து மூன்று மத்திய அமைச்சர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது

குறிப்பாக பொன்ராதாகிருஷ்ணன்,
கோவை ராதாகிருஷ்ணன் மற்றும் ஹச் ராஜா போன்றவர்களை தேர்தலில் நிறுத்தி அவர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த முறை எப்படியாவது மத்திய அமைச்சர் பதவியை பிடித்து விட வேண்டும் என்ற வேகத்தில் ஹச் ராஜா செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இதற்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தேர்தலில் ஹச்.ராஜா வெற்றி பெறும் பட்சத்தில் அவருக்கு மத்திய ரயில்வே துறை மந்திரி பதவி ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது

இந்த தகவலை தெரிந்து கொண்ட  ஹச்  ராஜா ஆதரவாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தேர்தல் பணியாற்றி வருவதாக சிவகங்கை தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது

Sharing is caring!

shares