புல்வாமா தாக்குதல் இந்திய ராணுவம் பாக்கிஸ்தான் மீது தாக்குதல் விகாரத்தை படமாக்க இந்தி சினிமா தயாரிப்பாளர்கள் இடையே கடும் போட்டி

புல்வாமா தாக்குதலை அடிப்படையாக கொண்டு படம் எடுக்க இந்தி சினிமாக்காரர்கள் தயாராகி உள்ளனர். மும்பையில் உள்ள இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இது தொடர்பான தலைப்பை பதிவு செய்ய 5-க்கு மேல் தயாரிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகள் போட்டி போட்டுள்ளனர்.

புல்வாமா தி டெரர் அட்டாக், புல்வாமா வெர்சஸ் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0, சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 மற்றும் பாலகோட், வார் ரூம், இந்துஸ்தான் ஹமாரா ஹை உள்ளிட்ட பல தலைப்புகளை பதிவு செய்ய முயன்றுள்ளனர். விரைவில் இந்த படங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!

shares