பாஜக கூட்டணியில் இருந்து திமுக கூட்டணிக்கு தாவிய இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர்

இந்தியாவின் மிகப்பெரிய கல்வி சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறது எஸ்ஆர்எம் பல்கலைக் கழகம்

இதற்கு இந்தியா இலங்கை மலேசியா என பல இடங்களில் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இந்த பல்கலைக்கழகத்தின் சொத்து மதிப்பு சுமார் பத்தாயிரம் கோடிக்கும் அதிகம்

மேலும் புதிய தலைமுறை என்ற ஊடகதையும் வேந்தர் தொலைக்காட்சி எஸ்ஆர்எம் ஆம்னி பஸ் சர்வீஸ் என பல துறைகளிலும் இந்நிறுவனம் கால்பதித்துள்ளது

இதன் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் இந்திய ஜனநாயக கட்சி என்ற தனது உடையார் சமுதாயத்தை ஒருங்கிணைத்து இயக்கம் ஒன்றை வைத்துள்ளார்

இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் தோல்வியடைந்தாலும் பாஜகவுடனான நட்பு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தற்போது பாஜக அதிமுக கூட்டணி இணைந்துள்ளதால் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு இடம் ஒதுக்குவது சிரமமாக இருந்ததாக கூறப்படுகிறது

இதனால் விரக்தி அடைந்த பாரிவேந்தர் தற்போது திமுக கூட்டணியில் இணையும் முடிவை எடுத்தார் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது அவர் மீண்டும் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

Sharing is caring!

shares