பாகிஸ்தான் ராணுவம் மனரீதியாக துன்புறுத்தியது விமானி அபிநந்தன்

கடந்த 14ம் தேதி புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக கடந்த மாதம் 26ம் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட் பகுதியில் தீவிரவாத முகாமின் நிலைகள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.

தாக்குதலின்போது அபிநந்தன் என்ற விமான ஓட்டிய மிக் ரக போர் விமானத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். விமானத்திலிருந்து பாதுகாப்பாக பாராசூட் மூலம் வெளியே பறந்த அபிநந்தனை, பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

அதன்பின் சர்வதேச அழுத்தம், இந்தியாவின் நெருக்கடிகள் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அதன் எதிரொலியாக… 3 நாட்களுக்கு பின் அபிநந்தனை நேற்றிரவு வாகா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.

அவர் தற்போது டெல்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கண், முகம் மற்றும் கைகளில் காயங்கள் உள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அது தவிர கூலிங் டவுன் சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. நாளையும் இந்த சிகிச்சை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மருத்துவமனைக்கு நேரில் சென்ற பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நலம் விசாரித்தார்.

இந்நிலையில் பாகிஸ்தான் பிடியில் இருந்த போது மனரீதியாக துன்புறுத்தப்பட்டு உள்ளதாக அபிநந்தன் கூறியிருக்கிறார். உடல் ரீதியாக துன்புறுத்தப் படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Sharing is caring!

shares