சுடபட்ட பாகிஸ்தான் விமானத்தை காட்டசொன்னால் தகரம் பொறுக்கி வந்திருக்கின்றார்கள் என்று நக்கல் அடித்த பாகிஸ்தான் தற்போது அமெரிக்காவிடம் சிக்கிக் கொண்டது

இந்தியா வான்பரப்புக்குள் கடந்த புதன்கிழமை அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் விமானப் படையை சேர்ந்த எஃப்-16 விமானங்கள் இந்திய ராணுவ நிலைகளை தாக்க முயற்சி செய்தன. அதில் ஒரு எஃப்-16 விமானம் மட்டும் தாக்குதலுக்கு உள்ளாகி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்து நொறுங்கியது. அந்த எஃப்-16 விமானம் ஏவிய நடுத்தர இலக்கு ஏவுகணையான AIM-120 AMRAAM மட்டும் இந்திய பகுதிக்குள் விழுந்துவிட்டது.

இந்தியவிமானம் அதை அழிக்கும்பொழுது அந்த ஏவுகனை இருந்து வெடித்து அதன் கழிவான இந்த தகடு இந்தியா கையில் சிக்கியது

பொதுவாக சர்வதேச விதிப்படி எந்தநாடு தயாரித்தாலும் அதில் சில எண்கள் பதியபட வேண்டும் அப்படி அமெரிக்காவின் தயாரிப்பாக இந்த ஏவுகனை தயாரிக்கபட்டு இந்த நம்பரும் பொறிக்கபட்டிருந்தது

பாகிஸ்தான் என்னவகை ஆயுதம் வாங்குகின்றது என்ற மிக துல்லிய தகவலை வைத்திருந்த இந்தியா, அது அமெரிக்க தயாரிப்பு எனினும் பாகிஸ்தானுக்கு அது கொடுத்த பட்டியலில் இல்லை என்பதை உணர்ந்து மிக தந்திரமாக காட்சியினை வெளியில் கொண்டுவந்தது

அமெரிக்க பத்திரிகைகள் விஷயத்தை பெரிதாக்கின , விஷயம் அமெரிக்க அரசுக்கு சிக்கலாயிற்று அதாவது இந்த ஏவுகனையினை அமெரிக்கா விற்றது நிஜம் ஆனால் தைவானுக்கு என அவர்கள் பட்டியலில் இருக்கின்றது, அமெரிக்க செனட்டிலு அந்த ஒப்புதலே இருக்கின்றது

அதாவது 2008 மற்றும் 2010ல் இந்த ஏவுகனை தைவானுக்கு விற்கபட்டதாக ஒப்புதல் பெறபட்டுள்ளது அமெரிக்க சட்டபடி அபாய ஆயுதங்களை இன்னொருநாட்டுக்கு விற்கும்பொழுது செனட்டின அனுமதி வேண்டும்

விஷயம் வெளிவந்ததும் தைவான் அவசரமாக மறுக்கின்றது, தங்களுக்கு அப்படிபட்ட ஏவுகனை ஏதும் விற்கபடவில்லை எனவும், அதை பொறுத்தும் அளவு விமானம் தங்களிடம் இல்லை எனவும் சொல்லிவிட்டது தைவான்

(தைவான் இப்படி சொன்னதும் சீனா புன்னகைப்பது வேறுவிஷயம், தைவானின் ராணுவ ரகசியம் வெளியாயிற்று) தைவானுக்கு விற்பதாக சொல்லி அமெரிக்க அரசோ ராணுவமோ திருட்டுதனம் செய்து செனட்டில் ஒப்புதல் வாங்கியதா என சலசலக்கின்றது அமெரிக்கா

ஏற்கனவே எப்16 விமானத்தை தாக்குதலுக்கு பயன்படுத்தியதை அமெரிக்கா கண்டித்து கொண்டிருக்கின்றது , அங்கு அதுவும் சிக்கல் இப்பொழுது அமெரிக்க தயாரிப்பான AMRAAM வகை ஏவுகனைகள் தைவானுக்கு கொடுக்கபட்டதாக எப்படி பாகிஸ்தானுக்கு போனது என அடுத்த சிக்கல்

பாகிஸ்தான் விஷயத்தில் அமெரிக்கா காட்டும் இரட்டை வேடத்தை போட்டு உடைத்திருகின்றது இந்தியா ஒருபக்கம் பாகிஸ்தான் தீவிரவாதத்தை கண்டிப்பதும், இன்னொரு பக்கம் ரகசியமாக அமெரிக்க செனட்டை ஏமாற்றி ஆயுதம் கொடுப்பதுமாக அது ஆடியிருப்பதை கண்டு பலர் முகம் சுளிக்கின்றனர்

பல சர்வதேச சிக்கல்களை ஏற்படுத்திவிட்டு, அதில் பாகிஸ்தானை பல வகையில் சிக்கவைத்துவிட்டு அமைதியாக புன்னகைகின்றது இந்தியா ராணுவம்

Sharing is caring!

shares