விமானி அபிநந்தனை அழைத்து வந்த அந்தப் பெண் அதிகாரி யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்ட அபிநந்தனுடன் ஒரு பெண்ணும் நின்று கொண்டு இருந்தார். அவர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு நேற்று விடுவிக்கப்பட்ட அபிநந்தனுடன் ஒரு பெண்ணும் நின்று கொண்டு இருந்தார். அவர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை வாகா எல்லைக்கு அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகள் அழைத்து வந்தனர். நேற்று மாலை 5.20 மணிக்கு அழைத்து வருவதாகக் கூறிய பாகிஸ்தான், இரவு 9 மணிக்கே வாகா எல்லைக்கு அழைத்து வந்தனர். அப்போது, வாகா எல்லையில் நிற்கும்போது அவருடன் ஒரு பெண்ணும் இருந்தார். அது அவரது மனைவி என்று சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. ஆனால், அந்தப் பெண் அவரது மனைவி கிடையாது என்பது தெரிய வந்துள்ளது.

வந்தார் வான்வீரர்..!!
அவருடன் வந்த பெண் அதிகாரியின் பெயர் டாக்டர் ஃபரிஹா புக்தி. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய விவகாரங்களை அவர் கையாண்டு வருகிறார். குல்புதீன் ஜாதவ் விவகாரத்தையும் எஃப்.எஸ்.பி (இந்தியாவில் இது ஐ.எஃப்.எஸ்) அதிகாரியான ஃபரிஹா புக்திதான் கவனித்து வருகிறார்.

Sharing is caring!

shares