புல்வாமா தாக்குதலுக்கு காரமான ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்பதை அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, மசூத் ஆசார் வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு முடங்கிக் கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

இரு நாட்டிடையே பெரும் பதற்றம் ஏற்படக் காரணமான ஆசாரை ஏன் இதுவரை பாகிஸ்தான் கைது செய்யவில்லை என குரேஷியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குரேஷி, பாகிஸ்தானுக்கு ஆதாரங்கள் வேண்டும் என்றும், ஆதாரங்கள் இருந்தால்தான் நீதிமன்றத்தில் நிறுத்தி சட்ட நடவடிக்கையைத் தொடர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் தான் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்டனர் என்பதற்கான ஆதாரங்களை, இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் மூலம் அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு இந்திய அரசு அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

shares