நேஷனல் ஹெரால்டு வழக்கின் தீர்ப்பை உறுதி செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்: சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பின்னடைவு

டெல்லியில் நேஷனல் ஹெரால்டுவளாகத்தில் இருந்து அசோசி யேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் காலி செய்ய வேண்டும் என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்பை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு பத்திரி கையை, ஜவகர்லால் நேரு தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பின்னர் நிதி நெருக்கடியால் அந்த பத்திரிகை வெளிவரவில்லை. இந்தப் பத்திரிகையை ‘அசோசி யேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட் (ஏஜேஎல்) நிறுவனம் மீண்டும் வெளியிட்டது. இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம், ஏஜேஎல் நிறுவனத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாக புகார் எழுந்தது.

இதற்கிடையில் டெல்லியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் நேஷனல் ஹெரால்டு இயங்கி வந்தது. அந்த இடம் 56 ஆண்டுகளுக்கு முன்னர் ஏஜேஎல் நிறுவனத்துக்கு குத்ததைக்கு விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பே குத்தகை முடிந்துவிட்டதால், அந்த இடத்தை காலிசெய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு, 2 வாரங்களுக்குள் நேஷனல் ஹெரால்டு வளாகத்தை ஏஜேஎல் நிறுவனம் காலி செய்ய வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து ஏஜேஎல் நிறுவனம், டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி.கே.ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியிடப்பட்டது. மனு தள்ளுபடிஅப்போது, தனி நீதிபதியின் தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்தனர்.

மேலும், ஏஜேஎல் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், அரசு இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

Sharing is caring!

shares